வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட படை வீரர்கள் அனைவரும் கஃபிர் படைப்பிரிவின் ஷிம்ஷோன் பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இருவருக்கு 21 வயது, இருவருக்கு 20 வயது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் நேற்று காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஜபாலியா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை குறிவைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தான் 4 ஆக்கிரமிப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆனால் காசா மீதான தனது தாக்குதலை மூடி மறைக்கும் விதமாகவும், சொந்த நாட்டு மக்களிடம் பச்சாதாபம் தேடவும் இறந்த இளம் வீரர்களின் படங்களை செய்தியாக்கி இஸ்ரேல் அரசு உலவவிட்டு வருகிறது.
ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர்களின் இழப்பு எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தரைப்படை அறிவித்துள்ளது.






Leave a Reply